ஹர்திக் பாண்டியா இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டன் ஆவார் - மைக்கேல் வாகன்!
விரைவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்திய டி 20 அணிக்கு எதிர்கால நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியாதான் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே டி 20 போட்டியில் ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்படுவதில்லை. ஐபிஎல் தொடரில் தான் தலைமையேற்ற முதல் சீசனிலேயே அணியைக் கோப்பையை வெல்லவைத்தார். இந்த ஆண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் ஹர்திக் பாண்டியா தலைமை ஏற்று நடத்தும் காலம் சீக்கிரம் வரும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “ஹர்திக் பாண்டியா இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு கேப்டன் ஆவார். ஆனால் எப்போதென்று என்னால் சொல்ல முடியாது. அவருக்கு அமைதி கைகூடி வந்திருக்கிறது. போட்டியை பற்றிய புரிதலும் அவரிடம் உள்ளது. அவருக்கு இருந்த காயம் பற்றி நான் கவலைப்பட்டேன். ஆனால் இப்போது அவர் அதைக் கடந்து வந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
விரைவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now