
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நெருங்கி வருகிறது. வரும் பிப்.12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைத்து அணிகளும் மெகா ஏலத்திற்கான தங்களது வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு 896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இதில் முதல் முறையாக பூட்டானை சேர்ந்த மிக்யோ டோர்ஜி என்ற இளம் வீரர் இடம்பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் இதுவரை 2 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அவரின் திறமை ஐபிஎல் வரை கொண்டு வந்துள்ளது.
எம்.எஸ்.தோனியின் ரசிகரான மிக்யோ டோர்ஜி , சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது தோனி, அனைத்தையும் எளிதாக பார். முடிவுகளை விட செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்து, அப்போது தானாக சிறந்த முடிவு கிடைக்கும். தலையில் அதிக அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளாதே, அனுபவித்து கிரிக்கெட் விளையாடு என அறிவுரை கூறியுள்ளார்.