
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 உலகக்கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிர்ச்சியிலிருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், தற்போது ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் அவர் அடுத்த ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் வீரராக மட்டுமே விளையாடுவார். இந்நிலையில், கோப்டன் கோலி பதவி விலகுவதை அடுத்து, ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சேப்ரா, 'கூ செயலி' யில் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யாரைத் தேர்வு செய்வீரர்கள் என்ற கேள்வியுடன் ஏபிடி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வேல் ஆகியோரை தேர்ந்தெடுத்து வாக்கெடுப்பினை நடத்தியுள்ளார்.