உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விக்கெட் கீப்பர் யார்? - சஹா ஓபன் டாக்!
இங்கிலாந்து சுற்றுப்யணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என விருதிமான் சஹா வெளிப்படையாக கூறியுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக வரும் ஜூன் 2ஆம் தேதி இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணியில் அவருக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர் உறுதியாகவில்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் இருந்த போதும் முதலில் சாஹா தான் இந்திய அணியின் முதல் தேர்வாக இருந்தது. இதற்கு காரணம் அவரின் பேட்டிங் திறமை.
Trending
2020ஆம் ஆண்டில் விருதிமான் சஹா காயமடைந்த போது அந்த இடத்தை ரிஷப் பந்த் நிரப்பி வந்தார். ஆனால் தற்போது அவர் நிரந்தரமாக சாஹாவின் இடத்தை பிடித்துவிட்டார். 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் சாஹா தான் முதல் டெஸ்ட் போட்டியில் கீப்பிங் செய்தார். ஆனால் அவர் பேட்டிங்கில் சொதப்பியதால் அதற்கு அடுத்த போட்டியில் இருந்து ரிஷப் பந்த்திற்கு வாய்ப்பு போனது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரிஷப் பண்ட் இன்று வரை இந்திய அணியின் முதல் தேர்வாக உள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாஹா மற்றும் பண்ட் இருவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் ரிஷப் பந்திற்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள சாஹா,“ரிஷப் பந்த் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே அவர் தான் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதல் தேர்வாக இருப்பார். நான் எனக்கான வாய்ப்புகாக காத்திருப்பேன். அப்படி ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அந்த ஒரு வாய்ப்புகாக தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.
நான் அனைத்து சூழல்களிலும் ஒரே மாதிரி தான் உள்ளேன். நான் சிறப்பாக ஆடும் போதும் சரி, சொதப்பும் போதும் சரி, என்னுள் எந்த மாற்றத்தையும் நான் உணரவில்லை. மற்றவர்கள் கூறுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நம்மால் முயற்சி செய்ய தான் முடியும், சில சமயங்களில் அது சரியாக அமையும், சில சமயங்களில் சொதப்பி விடும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now