
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதுவரை, இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இங்கிலாந்து அணி படுமோசமாக தோல்வியடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இரு போட்டிகளிலும் முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தது. குறிப்பாக, இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் என எதனையும் சிறப்பாக கையாளவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கம்மின்ஸ், ஹேசல்வுட் என முக்கிய பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலிய அணியில் ஆடாத போதும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களிலும் சுருண்டது.