ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்டது ஏன்? - ஆண்டி ஃபிளவர் கருத்து!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் ஹசில்வுட் விடுவிக்கப்பட்ட காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024க்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி ஒவ்வொரு அணியிலிருந்தும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து மட்டும் 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில், ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று உலகக் கோப்பையில் விளையாடிய ஜோஷ் ஹசில்வுட்டும் ஒருவர். இறுதிப் போட்டியில் மட்டுமே ரவீந்திர ஜடேஜா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
Trending
இந்த தொடரில் மட்டும் அவர் 16 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஆர்சிபி அணியில் ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அணியில் இடம் பெற்றிருந்த ஹசில்வுட் கடந்த சீசனில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ஆர்சிபி அணியிலிருந்து ஏன் ஹசில்வுட் விடுவிக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “வரும் மார்ச் மாதம் ஹசல்வுட்டின் மனைவிக்கு குழந்தை குழந்தை பிறக்க இருக்கிறது. அவர் அணியில் இடம் பெற்றிருந்தால் பாதி தொடர்கள் வரை விளையாட வாய்ப்பில்லை. ஆகையால், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன், ஆர்சிபி அணியில் டிரேட் முறையில் ரூ.17.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆர்சிபி தக்கவைத்த வீரர்கள்:
ஃபாஃப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத படிட்கர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கரண் சர்மா, மனோஜ் பண்டேஜ், மாயங்க் டகர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), வைஷாக் விஜய் சங்கர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்ளி, ஹிமான்சு சர்மா, ராஜன் குமார், கேமரூன் க்ரீன் (மும்பை இந்தியன்ஸ்).
ஆர்சிபி விடுவித்த வீரர்கள்:
வணிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹசல்வுட், பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பர்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now