
Why series-opener between India-South Africa will be called Boxing Day Test? (Image Source: Google)
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய காமன்வெல்த் நாடுகளிலும் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் மட்டும் தான் மெல்போர்ன் நகரில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாளான டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கு பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு வரும் 26ஆம் தேதி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் மற்றும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் ஆகிய இரண்டு டெஸ்ட் போட்டிகளும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளாக நடத்தப்படுகின்றன.