இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இம்மாதம் இறுதியில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மே 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஷாய் ஹோப் தலைமையிலான இந்த ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பாட்ட இளம் வீரர் ஆண்ட்ரூ ஜெவெலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். அதேசமயம் இந்த அணியில் ஷிம்ரான் ஹெட்மையருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஹெட்மையர் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வருவதன் காரணமாக இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு ஷமார் ஜோசப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபொர்ட், குடகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெஃபெர்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் ஒருநாள் அணியில் தங்களது இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.
வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து
- முதல் ஒருநாள் போட்டி: மே 21, டப்ளின்
- இரண்டாவது ஒருநாள் போட்டி: மே 23, டப்ளின்
- மூன்றாவது ஒருநாள் போட்டி: மே 25, டப்ளின்
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்
- முதல் ஒருநாள் போட்டி: மே 29, பர்மிங்ஹாம்
- இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜூன் 1, கார்டிஃப்
- மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜூன் 3, ஓவல்
Win Big, Make Your Cricket Tales Now