Advertisement
Advertisement
Advertisement

WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் 15 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 19, 2023 • 12:00 PM
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

Trending


இந்நிலையில் இத்தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதான்படி முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய அல்ஸாரி ஜோஸப் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜான்சன் சார்லஸ் மற்றும் ஒஷேன் தாமஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டிஸ் அணியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: ரோவ்மேன் பவல் (கே). ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசைன், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஓஷேன் தாமஸ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement