WI vs AUS, 1st Test: ஹேசில்வுட் பந்துவீச்சில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

WI vs AUS, 1st Test: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 48 ரனக்ளையும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 44 ரன்களையும், பிராண்டன் கிங் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
பின்னர் இரண்டாவாது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சோபிக்க தவறிய நிலையில், டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களையும், அலெக்ஸ் கேரி 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 65 ரன்களையும் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறினாலும் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 310 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஆல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 301 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக அல்ஸாரி ஜோசப் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், ஜஸ்டின் க்ரீன் 38 ரன்களையும், ஜான் காம்பெல் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது, ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now