
wi-vs-aus-2021-shimron-hetmyer-bravely-scoops-mitchell-starc-for-a-six-to-bring-up-second-t20i-half- (Image Source: Google)
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 36 பந்துகளில் 61 ரன்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் ஸ்டார்க் வீசிய 16ஆவது ஓவரின் அதிவேகமான பந்தை ஷிம்ரான் ஹெட்மையர் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேல் சிக்சர் அடித்து தனது அரைசதத்தைப் பதிவு செய்தார்.