
WI vs AUS 4th T20I, Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை (ஜூலை 27) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ள நிலையில் எஞ்சிய போட்டிகளிலும் ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்யும். மறுபக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆறுதல் வெற்றிக்காக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
WI vs AUS: Match Details
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
- இடம் - வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானம், செயின்ட் கிட்ஸ்
- நேரம்- ஜூலை 27, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
WI vs AUS: Live Streaming Details
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம்.