சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

West Indies vs Australia 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் சில மைல்கல்லை எட்டவுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை மறுநாள் (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள்
ஸ்டார்க் இதுவரை விளையாடிய 98 டெஸ்ட் போட்டிகளில் 188 இன்னிங்ஸ்களில் 391 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அவர் தனது 400 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக இந்த சாதனையை படைக்கும் நான்காவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன் ஷேன் வார்ன், கிளென் மெக்ராத் மற்றும் நாதன் லையன் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரட் லீயை முந்தும் வாய்ப்பு
ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களையும் இணைத்து 290 போட்டிகளில் 380 இன்னிங்ஸ்களில் 714 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவர் மேலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ 718 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஷேன் வார்னே 999 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கிளென் மெக்ராத் 948 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் 50 சிக்ஸர்கள்
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து மிட்செல் ஸ்டார்க் இப்போட்டியில் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் மிட்செல் ஸ்டார்க் இப்போட்டியில் ஒரு சிக்ஸரை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 50ஆவது சிக்ஸரை பதிவுசெய்வார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக 50 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த ஏழாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now