
WI vs Aus: Jason Behrendorff, Tanveer Sangha named in 23-member preliminary squad (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் 23 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பெஹ்ரண்டோர்ஃப், தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசயம் நியூசிலாந்து தொடரில் பங்கேற்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.