
WI vs BAN 1st ODI Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மூன்று போட்டிகள் கொன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே டெஸ்ட் தொடரை சமன்செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடரையாவது கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. மறுபக்கம்வ் வங்கதேச அணியும் முன்னணி வீரர்கள் இன்றி இத்தொடரில் விளையாடுவதால் அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
WI vs BAN 1st ODI: Match Details
- மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
- நேரம்: டிசம்பர் 8, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
- இடம்: வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ்