
West Indies vs Bangladesh 1st T20I Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
.இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை செயின்ட் வின்செண்ட்டில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக டி20 தொடரிலும் வெற்றியை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது. மறுபக்கம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய வங்கதேச அணியானது இந்த டி20 தொடரையாவது கைப்பற்றி கம்பேக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WI vs BAN 1st T20I: Match Details
- மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
- நேரம்: டிசம்பர் 16, அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)
- இடம்: அர்னோஸ் வேல் மைதானம், செயின்ட் வின்செண்ட்