
WI vs BAN 2nd ODI Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியானது செயின்ட் கிட்ஸில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
WI vs BAN 2nd ODI: Match Details
- மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
- நேரம்: டிசம்பர் 10, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
- இடம்: வார்னர் பார்க், செயின்ட் கிட்ஸ்