WI vs ENG, 1st Test (Day 2): பிராத்வைட், ஹோல்டர் அசத்தல்; முன்னிலை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களைச் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். 48 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.
Trending
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பேர்ஸ்டோவ் சிறப்பாக ஆடி சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 36 ரன்னும், பென் போக்ஸ் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 86 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 268 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 109 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பேர்ஸ்டோவ் 140 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கேம்ப்பெல் 35 ரன்னும், புரூக்ஸ் 18 ரன்னும், பிளாக்வுட் 11 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. பானர் 34 ரன்னும், ஹோல்டர் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now