
WI vs ENG, 1st Test(Day 4): Zak Crawley hits century, England seize control against West Indies (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார்.வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பானர் 123 ரன்னும், பிராத்வெயிட் 55 ரன்னும், ஹோல்டர் 45 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், லீச், ஓவர்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.