
West Indies vs England 2nd ODI Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WI vs ENG 2nd ODI:போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
- இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், ஆண்டிகுவா
- நேரம் - நவம்பர் 02, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)