
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் அலிக் அதானஸ் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பிராண்டன் கிங் 17 ரன்களிலும், கேசி கார்டி, ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் சாம் கரண் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - செர்ஃபென் ரூதர்ஃபோர்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 63 ரன்களுக்கு ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்க, இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.