
WI vs ENG, 2nd Test: England have enjoyed a dominant morning in Barbados (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் 2ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் மேத்யூ ஃபிஷர், சகிப் முகமது ஆகியோர் அறிமுகமானார்கள்.
அதன்படி இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 119 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.