
WI vs ENG, 2nd Test: The Bridgetown Test Moves Draw! (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 507 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் ஆட் டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் பிராத்வெயிட் , பிளாக்வுட் சதம் அடித்தனர்.
நேற்று 4ஆவது நாள் ஆட்டம் நடந்தது. 219 ரன்கள் பின்தங்கி, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. அந்த அணி 187.5 ஓவர்களில் 411 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 96 ரன் குறைவாகும்.