
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரிலும் 2-0 என்ற காணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது இன்று செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் என் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பவர்பிளே ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ரொமாரியோ ஷெஃபர்ட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோவ்மன் பாவெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருடன் இணைந்து விளையாடிய வந்த ரொமாரியோ ஷெஃபர்ட் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்த கையோடு ரோவ்மன் பாவெலும் தனது விக்கெட்டை இழந்தார்.