
West Indies vs England 3rd T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரிலும் 2-0 என்ற காணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியானது நாளை செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். ஆதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WI vs ENG 3rd T20I:போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
- இடம் - டேரன் சமி கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
- நேரம் - நவம்பர் 15, நள்ளிரவு 1.30 மணி (இந்திய நேரப்படி)