
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பார்போடாஸிலுள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுள்ளதால். இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
- இடம் - கென்னிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
- நேரம் - இரவு 11 மணி (இந்திய நேரப்படி)