வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை டிரினிடாட்டிலுள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதலிரண்டு டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
- இடம் - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்
- நேரம் - இரவு 1.30 மணி (இந்திய நேரப்படி)
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 27
- வெஸ்ட் இண்டீஸ் - 16
- இங்கிலாந்து - 11
பிட்ச் ரிப்போர்ட்
பிரையன் லாரா மைதானமானது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் ரன்களை குவிப்பது எளிதாக இருக்கலாம். இதனால் இங்கு பெரிய ஸ்கோர் குவிக்க பேட்டர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.
உத்தேச லெவன்
வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஷெர்பேன் ருதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல் (கே), ஆண்ட்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கரன், கஸ் அட்கின்ஸன், ஆதில் ரஷித், தைமல் மில்ஸ், ரீஸ் டாப்லி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: பில் சால்ட் (துணைக்கேப்டன்), ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஹாரி ப்ரூக், வில் ஜாக்ஸ்
- ஆல்-ரவுண்டர்: சாம் கரன், ஆண்ட்ரே ரஸல்
- பந்துவீச்சாளர்கள்: ரீஸ் டாப்லி, அல்ஸாரி ஜோசப்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now