Advertisement
Advertisement
Advertisement

WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 26, 2023 • 23:06 PM
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பார்பிடாஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - கெனிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்த ஆட்டங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியில் டாப் 3 வீரர்களாக ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் இருப்பார்கள். தற்போது இந்திய அணியின் நடுவரிசையில் யார் விளையாட போகிறார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.இதை போன்று ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்.மேலும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது.

இதேபோன்று கீழ் வரிசையில் ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம், ஒன்பதாவது இடத்தில் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்யுமா இல்லை சாஹல் அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்குமா என்று தெரியவில்லை. பத்தாவது இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய சிராஜிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 11ஆம் இடத்தில் உம்ரான் மாலிக் அல்லது ஜெய்தேவ் உனாட்கட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

அதேசமயம் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் படுதோல்வியைச் சந்தித்து, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி இருமுறை உலகக்கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது முதல் முறையாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதியடையாதது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. 

இதனால் அந்த அணி இத்தொடரைக் கைப்பற்றி மீண்டும் தங்களது வெற்றிபாதைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்டீஸ் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஷிம்ரான் ஹெட்மையர் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ரோவ்மன் பாவெல், அலிக் அதானாஸ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

பந்துவீச்சைப் பொறுத்தவரையில், அல்ஸாரி ஜோசப், கேசி கார்டி, டோமினிக் டார்க்ஸ், ஒஷேன் தாமஸ், ஜெய்டன் சீல்ஸ் ஆகியோரும் இடம்பிடித்திருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 139
  • வெஸ்ட் இண்டீஸ் - 63
  • இந்தியா - 70
  • டிரா - 04
  • முடிவில்லை - 02

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அல்ஜாரி ஜோசப், கெவின் சின்க்ளேர், குடாகேஷ் மோதி, ஓஷேன் தாமஸ்

இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மையர், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, கைல் மேயர்ஸ், 
  • பந்துவீச்சாளர்கள்- குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement