Advertisement

WI vs IND 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் நடைபெறவுள்ளது.

Advertisement
WI vs IND 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
WI vs IND 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 29, 2023 • 11:19 AM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 29, 2023 • 11:19 AM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பர்போடாஸில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - கெனிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

முதல் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டைப் போல அதிரடி காட்ட முற்பட்டு 19 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஏற்கனவே கடந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் டக்அவுட் ஆகி சொதப்பியிருந்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், இரண்டாவது போட்டியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது சிராஜ் நாடு திரும்பிவிட்டதால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் முகேஷ் குமார் அணியில் நீடிப்பது உறுதியாகிவிட்டது. மேலும், இஷான் கிஷன் அடுத்த போட்டியில் மீண்டும் மிடில் வரிசைக்கு நகர்த்தப்பட வாய்ப்புள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் பெஞ்சில் அமர்ந்திருந்த யுஸ்வேந்திர சஹல், ஜெய்தேவ் உனாத்கட், அக்சர் படேல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

அதேபோல் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஒருநாள் போட்டியில் படுமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியில் கேப்டன் ஷாய் ஹோப்பை தவிற மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் குடகேஷ் மோட்டி, யானிக் கரியா, ஜெய்டன் சீல்ஸ், அலிக் அதனாஸ் ஆகியோர் இருப்பது சற்று நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.  அதேசமயம் இன்றைய போட்டியில் அல்ஸாரி ஜோசப், கேசி கார்டி, ஒஷேன் தாமஸ் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 140
  • வெஸ்ட் இண்டீஸ் - 63
  • இந்தியா - 71
  • டிரா - 04
  • முடிவில்லை - 02

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கே), ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், அல்ஜாரி ஜோசப், கெவின் சின்க்ளேர், குடாகேஷ் மோதி, ஓஷேன் தாமஸ்

இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் /சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்கள் - ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மையர், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, கைல் மேயர்ஸ், 
  • பந்துவீச்சாளர்கள்- குல்தீப் யாதவ், முகேஷ் குமார்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement