WI vs IND, 2nd T20I: திலக் வர்மா அரைசதம்; விண்டிஸுக்கு 153 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் பின்னடைவை சந்திந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டார்.
Trending
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து இணைந்த இஷான் கிஷன் - திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 27 ரன்களில் இஷான் கிஷான் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து 51 ரன்களுக்கு திலக் வர்மாவும், 24 ரன்களுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தங்களால் முடிந்த ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினர்.
இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடுவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ரோமாரியோ செஃபெர்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
Win Big, Make Your Cricket Tales Now