Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 2ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!  (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 19, 2023 • 10:15 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. டோமினிக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 19, 2023 • 10:15 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஏற்க்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - குயீன்ஸ் பார்க், டிரினிடாட்
  • நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் 3 தினத்திலேயே இந்திய அணி வெஸ்ட் இண்டீசை சுருட்டி  இருந்தது. இந்தியாவின் ஆதிக்கம் இந்த டெஸ்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலவீனமான வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்தியா சாதித்தது. ஜெய்ஷ்வாலின் பேட்டிங்கும், அஸ்வினின் பந்துவீச்சும் அபாரமான வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

ஜெய்ஷ்வால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். அவர் அறிமுக டெஸ்டிலேயே 171 ரன் குவித்து சாதனை புரிந்தார். இதேபோல கேப்டன் ரோஹித் சர்மா (103 ரன்), விராட் கோலி ஆகியோரும் பேட்டிங்கில் சாதித்தனர். அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அவர் 12 விக்கெட்களை வீழ்த்தி (முதல் இன்னிங்ஸ் 5+ இரண்டாவது இன்னிங்ஸ் 7) முத்திரை பதித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அஸ்வின் 2ஆவது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதேபோல ஜடேஜாவும் சிறப்பான நிலையில் உள்ளார். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. ஒருவேளை வேகப்பந்து வீரர் ஜெய்தேவ் உனட்கட் நீக்கப்பட்டால் நவ்தீப் சைனி அல்லது புதுமுக வீரர் முகேஷ் குமார் இடம் பெறலாம்.

பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும். அந்த அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை டெஸ்டில் வீழ்த்தியது கிடையாது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் சின்கிளேர் சேர்க்கப்பட்டு உள்ளார். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 99
  • வெஸ்ட் இண்டீஸ் - 30
  • இந்தியா - 23
  • முடிவில்லை - 46

உத்தேச லெவன்

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வைட் (கே), டெக்நரைன் சந்தர்பால், ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கெவின் சின்க்ளேர், அல்ஸாரி ஜோசப், ரஹ்கீம் கார்ன்வால், கீமார் ரோச், ஜோமல் வாரிக்கன்.

இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள்- ரோஹித் சர்மா, விராட் கோலி, கிரேக் பிராத்வைட், ஷுப்மான் கில், அலிக் அதானாஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர்
  • பந்து வீச்சாளர்- அல்சாரி ஜோசப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement