
WI vs IND 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதையடுத்து 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நாளை நடக்கிறது. டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.