Advertisement
Advertisement
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றவாது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 08, 2023 • 12:08 PM
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 3ஆவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!  (Image Source: CricketNmore)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. அதைதொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரில் நீடிக்க இளம் இந்திய அணியும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

இத்தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் திலக் வர்மா மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். இஷான் கிஷன், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. ஆடுகளத்துக்கு தகுந்த அளவில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்ட யுத்திகளை மேற்கொள்ளாதது பின்னடைவாக உள்ளது. 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறுவது நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்குகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும்.

பந்து வீச்சில் சிறிது மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. உடற்சோர்வு காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத குல்தீவ் யாதவ் களமிறங்கக்கூடும். இதனால் ரவி பிஷ்னோய் நீக்கப்படுவார். கடந்த ஆட்டத்தில் அவர், 4 ஓவர்களில் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதேபோன்று அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரும் தனது இடத்தை பறிகொடுக்கக்கூடும். அவருக்கு பதிலாக அவேஷ் கான் அல்லது உம்ரன் மாலிக் வாய்ப்பை பெறக்கூடும்.

அதேசமயம் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், டி20 கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த தங்களது நாட்டில் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்துவருகிறது. அதிரடிக்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமத்தை கொடுத்த நிலையில், இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டுவருவது அணிக்கு ஆறுதலளித்துள்ளது.

அணியின் பேட்டிங்ப் பொறுத்தவரையில் நிக்கோலஸ் பூரன், பிராண்டன் கிங், ரோவ்மன் பாவெல், ஷிம்ரான் ஹெட்மையர், கைல் மேயர்ஸ் ஆகியோரும், பந்துவீச்சில் அகீல் ஹொசைன், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், ஒஷேன் தாமஸ், ஒபேத் மெக்காய் ஆகியோரும் இருப்பது அணிக்கான பலமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் வென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்று விடும். இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி எந்த ஒரு தொடரையும் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வென்றது கிடையாது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வரலாற்றை மாற்றும் வாய்ப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • வெஸ்ட் இண்டீஸ் - 09
  • இந்தியா - 17
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன் 

வெஸ்ட் இண்டீஸ்: பிராண்டன் கிங், கே மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மேன் பாவெல் (கே), ரொமாரியோ ஷெப்ஃபெர்ட், ஜேசன் ஹோல்டர், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோஸப், ஓபேத் மெக்காய்

இந்தியா: ஷுப்மான் கில், இஷான் கிஷன்/ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கே), அக்சர் படேல், ரவி பிஷ்னோய்/குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள்- திலக் வர்மா, ரோவ்மன் பவல், சூர்யகுமார் யாதவ்
  • ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல் (துணை கேப்டன்), அகில் ஹொசைன், அல்சாரி ஜோசப், அர்ஷ்தீப் சிங், ரொமாரியோ ஷெப்பர்ட்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement