
WI vs IND, 4th T20I: India finished off 191/5 on their 20 overs (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டி20 போட்டி அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 33 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.