
WI vs IND, 5th T20I: Shreyas Iyer's fifty helps India Post a total on 188/7 (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கெண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 3இல் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியான் கேப்டனாக செயல்படுகிறார். மேலும் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.