Advertisement

WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement
WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
WI vs IND, 2nd Test: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 18, 2023 • 12:11 PM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி முடிவைடைந்தது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும்  இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 18, 2023 • 12:11 PM

இந்நிலையில் அப்போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட குழுவை வெஸ்ட் இண்டீஸ் இன்று அறிவித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரேமன் ரெய்ஃபர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். அவர் 3ஆவது வரிசையில் பேட்டிங் செய்து 2 மற்றும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழு, புதுமுக வீரர் கெவின் சின்க்ளேரை தேர்வு செய்து உள்ளது. 

Trending

கெவின் சின்க்ளேருக்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் ஆகும். சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சின்க்ளேர், ஏழு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் 18 முதல்தர ஆட்டங்களில் விளையாடி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சராசரியாக 29 மற்றும் 23.98 வைத்து உள்ளார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்காளதேசம் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி, மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரஹீம் கார்ன்வால் முதல் டெஸ்ட் போட்டியின் போது உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் களத்தை விட்டு வெளியேறினார். தற்போது அவர் குனமடைந்ததால் இரண்டாவது டெஸ்டிற்கான குழுவில் இடம்பிடித்து உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்: கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டெக்நரைன் சந்தர்பால், ரஹீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சியர், கீமார் ரோச்,கெவின் சின்க்ளேர் மற்றும் ஜோமல் வாரிக்கன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement