
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
WI vs PAK 1st T20I, Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட்வாஷும், பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இரு அணிகளும் மிகப்பெரும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதன் காரணமாக இதில் எந்த அணி வெற்றியை ஈட்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
WI vs PAK: Match Details
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
- இடம் - லாடர்ஹில் கிரிக்கெட் மைதானம், ஃபுளோரிடா
- நேரம்- ஆகஸ்ட் 1, அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)