
WI vs Pak: Azam Khan ruled out from second and third T20I (Image Source: Google)
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற இருக்கிறது. மேலும் இப்போட்டியைக் காண கரோனா தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அசாம் கான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 மற்றும் 3ஆவது டி20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.