
WI vs PAK: Shaheen Afridi stars as Pakistan level series (Image Source: Google)
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவிலுள்ள சபீனா பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஃபாவத் ஆலமின் அதிரடியான சதத்தால் 302 ரன்களில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இதில் அதிகபட்சமாக ஃபாவத் ஆலம் 124 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியால் தடுமாறியது. இதனால்150 ரன்கள் எடுத்திருந்த நிலையிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.