
WI vs PAK: The match has been called off and Pakistan win a 4-match series 1-0 (Image Source: Google)
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இரண்ட் போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டது. மேலும் ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளட்சர் - கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. இதனால் 3 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களைச் சேர்த்திருந்தது.