Advertisement
Advertisement
Advertisement

WI vs SA, 4th T20I: இரண்டு மாற்றங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டிக்கான 13 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 01, 2021 • 11:55 AM
WI vs SA: Akeal Hosein in place of Holder in squad for 4th T20I
WI vs SA: Akeal Hosein in place of Holder in squad for 4th T20I (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றியையும், தென் ஆப்பிரிக்க அணி இரண்டு வெற்றிகளையும் பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

Trending


இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டின் இன்று செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதையடுத்து இப்போட்டிக்கான 13 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிச்சுமை காரணமாக ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், கெவின் சின்க்ளேர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக அகீல் ஹொசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரோன் பொல்லார்ட் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மையர், ஃபாபியன் ஆலன், டுவைன் பிராவோ, பிடல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர், எவின் லூயிஸ், ஒபேட் மெக்காய், ஆண்ட்ரே ரஸ்ஸல், லென்ட்ல் சிம்மன்ஸ், அகீல் ஹொசைன். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement