-mdl.jpg)
West Indies vs South Africa Dream11 Prediction 3rd T20I: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WI vs SA: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - சபீனா பார்க், ஜமைக்கா
- நேரம் - நள்ளிரவு 12.30 மணி (இந்திய நேரப்படி)
WI vs SA: Pitch Report
இப்போட்டி நடைபெறும் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியை ஈட்டியுள்ளது. அதிலும் கடந்த போட்டியில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளனர். இதனால் நாளைய ஆட்டத்திலும் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
WI vs SA: Head-to-Head
- மோதிய போட்டிகள் - 21
- தென் ஆப்பிரிக்கா - 11
- வெஸ்ட் இண்டீஸ் - 10