Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 25, 2024 • 10:11 AM

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 25, 2024 • 10:11 AM

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை (ஆகஸ்ட் 26) டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதாலும், அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரில் நீடிக்க இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Trending

வெஸ்ட் இண்டீஸ் அணி

ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் போட்டியை வென்று உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதிலும் அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், அலிக் அதானாஸ் அணியோர் முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். மேற்கொண்டு ஜான்சன் சார்லஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ரோஸ்டன் சேஸ் உள்ளிட்ட வீரர்களும் அணியில் இருப்பது கூடுதல் பலம். 

மறுபக்கம் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஷமார் ஜோசப், குடகேஷ் மோட்டி, மேத்யூ ஃபோர்ட் ஆகியோர் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும் அகீல் ஹொசைன், ரொமாரியோ செஃபெர்ட் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அந்த அணியின் பந்துவீச்சு சற்று கவலையளிக்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன் : ஷாய் ஹோப், அலிக் அதானாஸ், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பாவல் (கே), ரொமாரியோ ஷெப்பர்ட், அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, மேத்யூ ஃபோர்ட், ஷமார் ஜோசப்

தென் ஆப்பிரிக்க அணி

ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு அந்த அணியின் பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் பேட்ரிக் க்ரூகர் ஆகியோரைத் தவிர்த்து, ரியான் ரிக்கெல்டன், ரீஸா ஹென்றிக்ஸ், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வேண்டர் டுசென் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். 

அதேசமயம் பந்துவீசில் நந்த்ரே பர்கர், குவேனா மபாகா, ஓட்னீல் பார்ட்மென், ஜார்ஜ் ஃபோர்டுயின் என அனைவரும் ரன்களை கட்டுப்படுத்த தவறியது அந்த அணியின் தொல்விக்கு அடுத்த காராணமாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் லுங்கி இங்கிடிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம் (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனோவன் ஃபெரீரா, பேட்ரிக் க்ரூகர், நந்த்ரே பர்கர், ஜார்ன் ஃபோர்டுயின், ஒட்னீல் பார்ட்மேன்/லுங்கி இங்கிடி, குவேனா மபாகா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement