Advertisement
Advertisement
Advertisement

WI vs SA,4th T20I: பொல்லார்ட், பிராவோ அசத்தல்; தொடரை சமன் செய்தது விண்டிஸ்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 02, 2021 • 07:21 AM
WI vs SA,4th T20I: Quinton de Kock 60 in vain as West Indies level series
WI vs SA,4th T20I: Quinton de Kock 60 in vain as West Indies level series (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20  கிரிக்கெட் போட்டி செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சிம்மன்ஸ் 47 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.

Trending


கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி, 25 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 168 ரன்கள் இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ரீசா ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம், பவுமா, மில்லர் என் அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரைப் போராடிய டி காக் மட்டும் 60 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தர். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் டுவைன் பிராவோ நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பொல்லார்டுக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement