
WI-W vs SA-W, 2nd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டிஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WI-W vs SA-W: Match Details
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
- இடம் - ஓவல் கிரிக்கெட் மைதானம், பார்படாஸ்
- நேரம்- ஜூன் 22, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
WI-W vs SA-W: Live Streaming Details
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் காணலாம்.
WI-W vs SA-W: Head-to-Head in IPL
- Total Matches: 26
- West Indies Women: 14
- South Africa Women: 9
- No Result: 3