
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷூதோஷ் சர்மா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் இருவரும் தலா 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது.
சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், உனாத்கட், ஹர்ஷல் படேல், மலிங்கா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் தனித்துவ சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.