
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இளம் வீரரான ருதுராஜ், கடந்த 2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த பேட்டா் (635) என்ற பெருமை பெற்றவா். மேலும் 2021 இந்திய ‘ஏ’ மற்றும் சீனியா் அணியில் இடம் பெற்று விளையாடினார்.
அதன்பின் நடப்பாண்டு விஜய் ஹஸாரே கோப்பை போட்டி காலிறுதியில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் உள்பட 4 சதங்களைச் சோ்த்து மொத்தம் 660 ரன்களை விளாசினாா் ருதுராஜ். மேலும், அரையிறுதி ஆட்டத்தில் ஒரே ஓவரில் 7 சிக்ஸா்களை விளாசிய சாதனையும் ருதுராஜ் வசம் உள்ளது. வரும் 2023இல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில் ருதுராஜ் சீனியா் அணியில் இடம் பெறுவாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவா், “டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்திருந்தாலும், ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்று ஆடவே விரும்புகிறேன். அப்போது தான் ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுமை அடையும்.