
டி20 உலகக் கோப்பை போட்டியின் பிரதான சுற்று வரும் 24ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் இரு பவுண்டரிகள் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 2ஆவது பயிற்சி ஆட்டம் நாளை அபுதாபியில் இந்திய அணிக்கு எதிராக நடக்கிறது. இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்ய இந்திய அணிக்கு இந்தப் பயிற்சி ஆட்டங்கள் உதவும். இந்திய அணி முதல் ஆட்டமே பாகிஸ்தான் அணியுடன் மோத இருப்பதால், மிகுந்த கவனத்துடன் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்யும்.
இதில் ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயம் காரணமாக 2-வது சுற்றில் கடைசி ஒரு போட்டியில் மட்டும்தான் களமிறங்கினார். மற்ற எந்தப் போட்டியிலும் களமிறங்கவில்லை.