ஐபிஎல் 2022: இன்றைய போட்டியிலாவது கோலி ஃபார்முக்கு திரும்புவாரா? காத்திருப்பில் ரசிகர்கள்!
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலி, இன்றைய போட்டியில் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்புவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஐபிஎல் 15ஆவது சீசனில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் இன்னொரு விசயம், விராட் கோலியின் சொதப்பல் பேட்டிங் தான்.
கடந்த ஆண்டை விட, இம்முறை ஐபிஎல் தொடருக்கான டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சிஎஸ்கே, மும்பையின் தொடர் தோல்விகள்
Trending
விராட் கோலி, ரோகித்தின் சொதப்பல் பேட்டிங் தான். ஆர்சிபி தற்போது 9 போட்டியில் விளையாடி 5இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
தற்போது கடைசியாக விளையாடி 2 போட்டியிலும் பெங்களூரு அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐதராபாத்க்கு எதிராக 68 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக 115 ரன்களும் எடுத்தன. இதற்கு காரணம் ஆர்சிபியின் பலமாக கருதப்படும் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டுபிளஸிஸ் ஆகியோரின் சொதப்பலான பேட்டிங் தான்.
9 போட்டியில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 128 ரன்கள் தான் அடித்துள்ளார். சராசரி 16. இதில் 2 முறை கோல்டன் டக். இதனால் கடந்த போட்டியில் கோலி தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அப்போதும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதே போன்று மேக்ஸ்வெல்லும் 8, 26, 55, 23, 12, 0 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். தொடக்க வீரர்கள் சொதப்புவதால், அவருக்கும் நெருக்கடி ஏற்படுகிறது.
டு பிளெஸில் பஞ்சாப்க்கு எதிராக 88 ரன்கள், லக்னோக்கு எதிராக 96 ரன்கள் அடித்தாலும் 5, 16,8, 8,5,23 ஆகிய ரன்கள் மட்டும் தான் அடித்து சரிவை கண்டுள்ளார். அப்படி இருந்தும் பெங்களூரு வெற்றி பெற்றதற்கு 2 ஆட்டங்களில் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் தான் காரணமாக அமைந்துள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை 8 போட்டியில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் குஜராத் வென்றால் பிளே ஆப் சுற்று கிட்டதட்ட உறுதி. ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷித் கான், திவேட்டியா அதிரடி ஆட்டம் விளையாடி கடைசி ஓவரில் 23 ரன்கள் விளாசினர். கப்பல் போல் போட்டி மூழ்கினாலும், அதிலிருந்து தப்பிக்கும் எலி போல் எப்படியாவது குஜராத் அணி வென்றுவிடுகின்றனர்.
கோலியை ஷமி 4 முறை ஐபிஎல் தொடரில் ஆட்டமிழக்க செய்துள்ளார். நடப்பு சீசனில் முகமது ஷமி பவர்பிளேவில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆனால் கோலியோ கடைசியாக 6 போட்டியில் ஒரு முறை தான் பவர்பிளேவை தாண்டி விளையாடி உள்ளார். மற்ற முறை எல்லாம் அதற்குள் நடையை கட்டிவிடுவார்.
இதனால் இன்றைய ஆட்டத்திலும் கோலியை ஷமி விரைவில் ஆட்டமிழக்க வைக்கலாம். அப்படி நடந்தால் அது கோலியின் இடத்துக்கே ஆபத்தை தரும். ரோகித் பிறந்தநாளன்று விராட் பட்டையை கிளப்புவாரா? விடை இன்று மதியம் 3.30 மணிக்கு தெரிந்துவிடும்.
Win Big, Make Your Cricket Tales Now