சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி!
சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி இந்த ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த விரும்பும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது.
Trending
இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும். இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன். ஆனால் இன்ஷா அல்லாஹ் பாகிஸ்தானுக்கு இந்தியா வருவது குறித்து நல்ல செய்தியை கேட்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Champions Trophy only in Pakistan!
— Arfa Feroz Zake (@ArfaSays_) July 4, 2024
Chairman PCB Mohsin Naqvi - " Champions Trophy 2025 will only be played in Pakistan. I will not comment on Indian Cricket Team but insha'Allah we will hear good news regarding India's visit to Pakistan!" #CT25
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மார்ச் 01ஆம் தேதி லாகூரில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்து எந்த முடிவையும் பிசிசிஐ இதுவரை இறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now